Covai Kongu Nanbargal
- Home
- About Kongu
- Covai Kongu Nanbargal
கோவை கொங்கு நண்பர்கள் அமைப்பு
இன்றைய கசப்பான வாழ்க்கை முறை ‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்பது இது மேலோட்டமாக இனிப்பாக தோன்றும் ஆனால் நம்முடைய முன்னோர்கள் ‘இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்ந்தவர்கள்’ அது கசப்பாக தோன்றும் ஆனால் முது நெல்லிக்கனி போல ‘முன்னே கசக்கும் பின்பு இனிக்கும்’ என்பது தான் உண்மை.
கொங்கு வேளாளர் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும், அனைவருக்குள்ளும் ஒற்றுமையை மேலோங்கச் செய்ய வேண்டும், தொழில்ரீதியாக மற்றும் குடும்ப ரீதியாக ஒருவருக்குள் ஒருவர் உதவிகள் புரிந்து கொள்ள வேண்டும்,
எதிர்கால தலைமுறை நம்முடைய சமூகத்தில் நம்முடைய முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை தெரிந்துகொண்டு அதை அறிந்து அவர்கள் தங்களுடைய வாழ்வியல் முறையை செம்மையாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற பெரும் நோக்கங்களோடு ஆரம்பிக்கப்பட்டது இந்த கோவை கொங்கு நண்பர்கள் அமைப்பு.
சமுதாயக் கட்டமைப்பில் நமக்கு என்று ஒரு அமைப்பு, அடையாளம் இன்றைய காலகட்டத்தில் அவசியம், சமுதாயத்தில் நடக்கக்கூடிய கலாச்சார சீரழிவை இந்த அமைப்பு மூலமாக தடுப்பதற்கு வாய்ப்பாக அமையும், அதுமட்டுமல்லாமல் நம்முடைய கொங்கு நண்பர்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர்களுக்கு ஒரு சிரமம் என்று வரும்போது அனைவரும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு உறுதுணையாக இருப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும், மேலும் அரசாங்க அலுவலகங்களில் நம்முடைய குரல் ஒருமித்து ஒலிக்க உறுதியான கட்டமைப்பு தேவை என்பதாலும் இந்த அமைப்பை உருவாக்குவது இன்றைய தேவையாகவும் இருக்கிறது. மேலும் ஒவ்வொரு முக்கிய ஊர்களிலும் இது மாதிரியான உறுதியான அமைப்பு இருப்பது நமக்கு ஒரு தேவை என்று வரும்போது ஒன்று சேர்ந்து அரசுக்கு அழுத்தத்தை கொடுப்பதற்கு வாய்ப்பாக இருக்கும் மேலும் குறிப்பாக கோவை நகரத்திலே கொங்கு வேளாளர்களின் மக்கட்த்தொகை விகிதாச்சார அடிப்படையில் குறைந்து கொண்டே வருகிறது நிதர்சனமான உண்மை ஆக இன்றைய தேதியில் இப்படி ஒரு அமைப்பு இருப்பது மிக மிக அவசியம் ஆகிறது.