இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் ‘வேள்’என்றும் ‘வேளிர்’ என்றும் சிறப்பிக்கப்பட்டவர்கள். வேளாளர்கள்  ‘தொல்குடி’  மற்றும்  ‘தொன்முது குடி’ என்றும் குறிக்கப்பட்டனர். தமிழக மூவேந்தர்களும் ‘மகட்கொடை’ கொடுக்க உரிமை படைத்தவர்கள் வேளாளர்கள், அதுமட்டுமல்ல அரசர்கட்கு முடிசூட்டும் உரிமை படைத்தவர்கள்.

Kongu Velir Perumai

தூய பழக்கவழக்கமும், உயர் பண்பாடும், ஒழுக்கமும், கட்டுப்பாடும், நேர்மையும், வாய்மை தவறாமையும் உள்ள சமுதாயம் கொங்கு வேளாளர் சமுதாயம். 18 வகையான குடிபடைகள் ஆதரித்து சமய விழா, சமுதாய விழா, குடும்ப விழாக்களில் அனைவரையும் பங்கு கொள்ளச் செய்து ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி’ என்ற முதுமொழிக் கோப்ப வாழக்கூடியவர்கள் கொங்கு வேளாளர், கொங்கு நாட்டின் மண்ணின் மைந்தர்கள் கொங்கு வேளாளர், குலக் காணியூர்கள், குலதெய்வம், குலகுரு, காணிப்புலவர்கள்  ஆகியவர்களை பெற்று வாழ்ந்த ஒரே சமுதாயம் கொங்கு சமுதாயமாகும். ஊருக்கு ‘கொத்துக்காரர்’ நாட்டுக்கு ‘பட்டக்காரர்’ சடங்குக்கு ‘அருமைக்காரர்’ என்று நியமித்து, நீதிநெறிக்கு கட்டுப்பட்டு வாழ்ந்த சமுதாயம் கொங்குச் சமுதாயம், சமய நல்லிணக்கத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும் உயிர் மூச்சாகக் கொண்டவர்கள் கொங்கு வேளாளர்கள், தங்கள் குடும்பத்திற்கோ அல்லது குலத்திற்கோ வரும்  இழிவை எப்போதும்  பொறுத்துக் கொள்ள மாட்டார்கள், நல்ல தேக பலம் உடையவர்கள், கடினமான உழைப்பாளிகள் கொங்கு வேளாளர்கள், கொங்கு நாட்டார் இனம் மற்ற நாட்டு மக்களை விட வேறுபட்டதாகவே இருக்கும் ‘சொல் ஒன்று வெட்டு ஒன்று’ என்றே வாழக்கூடியவர்கள்