தமிழ்நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியில் கொங்கு வேளிர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையல்ல, கோயம்புத்தூர் ஈரோடு கரூர் திருப்பூர் சேலம் நாமக்கல் கிருஷ்ணகிரி திண்டுக்கல் போன்ற கொங்கு மாவட்டங்களில் பல்வேறு தொழில் நிறுவனங்களை திறம்பட நடத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுகின்றனர், குறிப்பாக திருப்பூர் கரூர் ஈரோடு கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் பெருமளவு ஏற்றுமதி நிறுவனங்களை நடத்தி சிறப்பான சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள், கோயம்புத்தூரில் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தொழிற்கூடங்கள் என பலவற்றை சிறப்பாக நிர்வகிக்கின்றனர், இன்றைய காலகட்டத்தில் தங்களுடைய குல தொழிலான விவசாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விலகி வருகின்றனர் என்பது வருத்தத்திற்குரிய அதே சமயத்தில் காலத்தின் கட்டாயமும் கூட, கிராம வாழ்க்கை முறையிலிருந்து நகர வாழ்க்கை முறைக்கு பெருவாரியான கொங்கு வேளாளர்கள் மாறிவிட்டார்கள் என்பதும் நிதர்சனமான உண்மை.
அரசியலில் கொங்கு வேளாளர்
கொங்கு மண்டல அரசியலில் கொங்கு வேளாளர் மிகுந்த அளவில் அமைச்சர்களாகவும் ஏன் தற்போது முதலமைச்சராகவே இருக்கக்கூடியவரும் கொங்கு வேளாளர் என்பது பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய விஷயம், எந்தக் கழகங்கள் ஆட்சியில் இருந்தாலும் அமைச்சரவையில் அதிக எண்ணிக்கையில் அமைச்சர்களைக் கொண்ட சமுதாயமாகவே இவர்கள் ஆரம்ப காலத்திலிருந்து இருக்கிறார்கள்.