இவர்களுடைய சீர் முறைகளே இன்றளவும் இவர்களுடைய பாரம்பரியத்தை கட்டி காப்பாற்றிக் கொண்டு வருகிறது என்று சொன்னால் அது மிகை அல்ல.
கொங்கு வேளாளர்களுடைய பாரம்பரியத்தை காப்பதில் சீர் முறைகளுக்கு பெரும்பங்குண்டு.
“சீர் இல்லா கல்யாணம் சிறப்பில்லாத கல்யாணம்” என்ற முதுமொழியும் உண்டு
சீர் முறைகளை மறந்து இருத்தல் நம்முடைய பாரம்பரியத்தை விட்டுக்கொடுத்தல் என்றாகிறது.
கொங்கு வேளாளர்கள் உயர் பண்பாடு கொண்டு வாழ்ந்தவர்கள் என்பது அறியப்படுகிறது அத்தகைய உயர் பண்பாட்டின் உடைய மிளிர்ச்சியாக கொங்கு வேளாளர் வாழ்வில் ஒன்றாக கலந்தது சீர் முறைகள், பிறப்பிலிருந்து இறப்பு வரை அவர்களுடைய வாழ்வில் பின்னிக் கிடக்ககூடியவைகள் இந்த சீர்முறைகள், மிக முக்கியமாக இவர்களுடைய திருமணங்களில் மட்டும் 108 சீர்கள் உள்ளதாக அறியப்படுகிறது, அது தவிர எழுதிங்கள்சீர், குழந்தை பிறந்தவுடன் தீட்டு நீங்க புண்யார்ச்சனை செய்தல், பெயர் வைத்தல், தொட்டிலில் இடுதல், ஆச்சி மாடு கொடுத்தல், முடி இறக்குதல், காது குத்தல், எழுதீங்கள் சீர், பச்சை குத்தல், பூப்பு நன்னீராட்டு என்று சொல்லக்கூடிய வளைகாப்பு, இன்னும் பொருள்தந்த குலத்தாருக்கு முழுக்காதன் சீர், பெரியகுலத்தாருக்கு பொன்னூஞ்சல்,பூந்தேர் போன்ற சீர்களும் நடைமுறையில் உள்ளது.